moe.gov.lk

Latest news

mbd

இந்தியாவில் உள்ள MBD குழுமத்தில் இருந்து இரண்டு பாடசாலைகளுக்கு டிஜிட்டல் வகுப்பறைகள் அன்பளிப்பு

இந்தியாவில் MBD உள்ள குழுமம் இலங்கையில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு டிஜிட்டல் தொழில் நுட்ப கருவிகளுடனான இரண்டு வகுப்பறை வசதிகளை அன்பளிப்பு செய்வதற்கு தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. இந்த வகுப்பறைகளை நிறுவுதல் தொடர்பான உத்தியோகபூர்வ வேலைத் திட்டம் சமீபத்தில் (06) கல்வி அமைச்சில் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள தலைமையில், MBD குழுமத்தின் தலைமை நிறவேற்று அலுவலர் திருமதி மொனிக்கா மல்ஹோத்ரா உள்ளிட்ட இந்திய பேராளறர்களின் பங்குபற்றுதலோடு இடம் பெற்றது.

குருணாக்கல் நாக்கவத்தை தேசிய பாடசாலை மற்றும் கேகாலை கனேதன்னை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இந்த டிஜிட்டல் வகுப்றைகள் நிறுவப்படுவதற்குத் தெரிவு செய்யப்பட்டன. இந்த பாடசாலைகளில் காணப்படும் ஒரு வழமையான வகுப்பறை டிஜிட்டல் வசதிகளைக் நவீன வகுப்பறையாக மாற்றப்படும். அதற்கேற்றவாறு, ஒரு டிஜிட்டல் பலகை, ஒரு கணினி மற்றும் ஏனைய கருவிகள் இந்த பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருக்கின்றன.

Read more ...

mali

“கடந்த காலத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த கல்வி அமைச்சை பெருமை மிக்க ஒரு மட்டத்துக்கு உயர்த்துவதற்கு என்னால் இயலக் கூடியதாக இருந்தமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள்.

ஒரு நாட்டில்சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டுமானால், கல்வியில் ஒரு புரட்சிகரமான மாற்றம் செய்யப்படல் வேண்டும். அதற்குத் தேவையான அடித்தளம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறுகின்றார். பிள்ளைகளின் எதிர்கால நலனை முன்னிட்டு ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். கடிதங்கள், முகநூல் செய்திகள் போன்ற எத்தகைய ஊடகங்கள் மூலமாகவும் அறிவுஜிவிகளால் சமர்ப்பிக்கப்படும் அத்தகைய சகல முன்மொழிவுகளையும் பணிவுடன் ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

Read more ...

su

கொழும்பு றோயல் கல்லூரியில் முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்க்கும் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தற்காலிக வேலை நீக்கம்.

கொழும்பு றோயல் கல்லூரியில் முதலாம் தரத்தில் 2017 ம் ஆண்டில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் போது இடம் பெற்ற முறைகேடுகள் தொடர்பாக கல்வி அமைச்சர் மெகளரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் பணிப்புரையின் பேரில் அமைக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் பிரதான நேர்முகத் தேர்வுக் குழுவின் அலுவலர்கள் மூவர் மற்றும் மேன் முறையீட்டு சபையில் இருந்த அலுவலர்கள் நால்வரை வேலை நீக்கம் செய்யப்படுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் செய்துள்ளது.

Read more ...

new2

19 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓர் ஆண்டு சேவை ஆரம்ப பயிற்சியுடன் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 111 ம் வகுப்பில் 198 புதிய அலுவலர்கள்.

தற்போதைய பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அப்போது கல்வி அமைச்சராக இருந்த காலத்துக்குப் பின்னர் ஓர் ஆண்டு சேவை ஆரம்ப பயிற்சியுடன் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 111 ம் வகுப்பில் 198 புதிய அலுவலர்களைச் சேர்த்துக்கொள்ள முடிந்ததாக கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார்.

பண்டாரநாயக்கா நினைவு பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 111 ம் வகுப்பில் நியமனம் பெற்றவர்களான 198 புதிய அலுவலர்களின் சேவை நுழையும் ஆரம்ப விழாவின் பிரதம அதிதியாக் கலந்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

Read more ...

smart

திறன் வகுப்பறை (Smart Class Room) மாதிரி செயற்றிட்டம் ஆரம்பம்.

கல்வித் தர அபிவிருத்தியின் பொருட்டு தீர்மானமிக்க மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்படும் தீர்வுத் தீர்மானத்தை தாமதப்படுத்துவதற்கு அல்லது அது தொடர்பில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு ஒரு சிலர் முயற்சி மேற்கொள்கிறார்கள் என்றும், அத்தகைய காரணங்களால்தான் மாணவர்களுக்கு மிகவும் வசதியாக பயன்படுத்தக் கூடிய, மருத்துவர்கள் அனுமதி தந்துள்ள நவீன கதிரைகளை வழங்குவதற்கு இது வரை இயலாதிருக்கிறது என்றும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூற்றுகையில் தான் அவ்வாறான செயல்கள் மூலம் ஊக்கத்தை இழந்து விடாது, எவ்வாறாயினும் பாடசாலை பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்னிட்டு எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இன்று முற்பகல் (13) ஜயவர்தனபுர (ஆண்கள்) மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாதிரி திறன் வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்தபோது இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Read more ...

adm1

ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வி கற்பதற்கான உரிமையை பாதுகாப்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வது தனது பொறுப்பாகும் - கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம்.

கல்வி கற்கும் ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வி உரிமையைப் பாதுகாப்பது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது தனது பொறுப்பாகும் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறுகிறார்.

2017 ம் ஆண்டில் முதலாம் தரத்துக்கு பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளும் தேசிய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

Read more ...

tower

உலகில் இடம் பெறும் விரைவான மாற்றங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு ஏற்றவாறு சகல துறைகளிலும் மாற்றங்கள் இடம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

உலகில் இடம் பெறும் விரைவான மாற்றங்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு ஏற்றவாறு சகல துறைகளிலும் மாற்றங்கள் இடம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கடந்த 08 ம் திகதி முற்பகல் கொழும்பு 07 ல் அமைந்துள்ள அரச திரைப்படக் கூட்டுத்தாபன வளவில் கட்டுமானம் செய்யப்படும் பொது நாட்டிய நிர்வாக சபைக்காக கட்டப்படும் புதிய கட்டிடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Read more ...

text3

2017 ம் ஆண்டு இந்த நாட்டில் கல்வித் துறையில் பாரிய திருப்பம் ஏற்படுத்தும் ஆண்டு

2017 ம் ஆண்டு இந்த நாட்டில் கல்வித் துறையில் பாரிய திருப்பம் ஏற்படுத்தும் ஆண்டு என்றும் அதற்கு அமைய இந்த நாட்டின் பாடசாலைக் கல்விக்கு உரியவாறு மறுசீரமைப்பு பலவற்றை இந்த ஆண்டில் செயல்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார். இன்று (05) 2017 ம் ஆண்டுக்கான இலவச பாடநூல் பகிர்ந்தளிப்பு தேசிய பெருவிழா கோட்டை ஆனந்த கலையகத்தில் (வித்தியாலயம்) இடம் பெற்றபோது அதில் பிரதம அதிதியாக தலைமையேற்று உரையாற்றிய போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read more ...

jan1

அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வி அமைச்சின் புதிய ஆண்டு கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.

புதிய ஆண்டில் முதலாவது வேலை நாளான இன்று கல்வி அமைச்சுக்கு விசேட நாளாகும். பிறந்துள்ள 2017 புதிய ஆண்டில் ஆசீர்வாதத்தை வேண்டி நடாத்தப்பட்ட விசேட அனைத்து மத வழிபாடுகளுடன் கல்வி அமைச்சில் உத்தியோகபூர்வ கடமைகள் இன்று (02) முற்பகல் ஆரம்பமாகின. இது கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம் பெற்றது. கல்வி அமைச்சின் நலன்புரிச் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

Read more ...

min

சமாதானத்தை முழுமையாக்கும் அற்புதமான நத்தாலாகுக

aஉலக முழுதுமுள்ள கிறிஸ்தவர்களின் மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படும் அற்புதம் நிறைந்த நத்தால் தினத்தை முன்னிட்டு இலங்கை மக்களான சகல கிறிஸ்தவர்களுக்கும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு சமாதானத்தையும் அன்பையும் எடுத்துரைக்கின்றது. பெத்லகேம் நகரில் ஏழ்மையான மாட்டுத் தொழுவத்தில் பிறந்த, அமைதி மற்றும் சமத்துவம் பற்றி உலக மக்களுக்கு மிக அழகாக போதித்த கிறிஸ்துவுக்கு காட்டும் உண்மையான நன்றியாவது, இனம், சமயம் மற்றும் சமூகமாக ஒன்றிணைந்து ஒத்துழைத்து சகவாழ்வு வாழ்வதுமாகும்.

Read more ...

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.