moe.gov.lk

NCOE

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து கொள்வது எவ்வாறு? (How to be enrolled for teacher training?)

இதற்கான விண்ணப்பங்கள் அரசாங்க வர்த்தமானியூடாகக் கோரப்படும். அரசாங்க பாடசாலைகளில் பணியாற்றும் பட்டதாரியல்லாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய-உதவியாளர்களும் அனுமதிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளிலும் பிரிவேனாக்களிலும் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக விண்ணப்பதாரிகள் முறையான நியமனக் கடிதங்களை வைத்திருக்க வேண்டும்.

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுநர்களைச் சேர்த்துக் கொள்ளும் முறை (How to select trainees to the National Colleges of Education?)

  • ஆண்டு தோறும் கல்வி முறைமையில் ஏற்படும் தேவைகளுக்கு ஏற்ப அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
  • ஒவ்வோராண்டும் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளப்பட்டு பாடநெறிகளின் தேவைக்கேற்ப எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். அந்தந்த பாடநெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான தகைமை வர்த்தமானியில் குறிப்பிடப்படும்
  • ஆங்கிலம், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் மற்றும் உடற்கல்வி பாடநெறிகள் தவிர்ந்த மற்றெல்லா பாடநெறிகளுக்கும் க.பொ.த.(உ.த.)  புள்ளியின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
  • ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாடங்களுக்கு க.பொ.த.(சா.த.) மற்றும் க.பொ.த.(உ.த.) வில்  தகைமையை நிறைவு செய்துள்ள விண்ணப்பதாரிகள் பரீட்சைத்  திணைக்களத்தினால் நடாத்தப்படும் நடத்தைத் தேர்வுக்கும் வேண்டும். அவர்கள் நடத்தைத் தேர்வில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
  • உடற் கல்விப் பாடநெறிக்கு க.பொ.த.(சா.த.) மற்றும் க.பொ.த,(உ.த) தகைமையை நிறைவு செய்த விண்ணப்பதாரிகள் அவர்களின் விளையாட்டுத் திறமைகளுக்காகப் பெற்ற புள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு புள்ளிகள் வழங்குதல் தொடர்பாகப் பரிசீலிக்கப்படும் விளையாட்டு மற்றும் புள்ளி அட்டவணை வர்த்தமானியில் வெளியிப்படும்

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் பயிற்சிச் சான்றிதழ் பெறவேண்டியது ஏன்? (Why the Trained Certificate of Teachers College should be obtained?)

பட்டதாரியல்லாத பயிற்றப்படாத ஆசிரியராக சேர்ந்தவர்கள் 3-11 தரத்திலிருந்து பதவியுயர்வு பெறுவதற்கு இந்த சான்றிதழ் அவசியமாகும்

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.