moe.gov.lk

இருமொழிக் கல்வித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பாடசாலைகளால் நிறைவு செய்யப்பட வேண்டிய திட்டமுறைகள் யாவை? (What are the criteria to be fulfilled by the school to start the Bilingual Education programme?)

பாடசாலைகளில் இருமொழிக் கல்வித் திட்டத்தை ஆரம்பித்தல்

இருமொழிக் கல்வித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பாடசாலைகளால் நிறைவு செய்யப்பட வேண்டிய திட்டமுறைகள் யாவை?

இரண்டு பிரதான திட்டமுறைகள் இருக்கின்றன:-
(1)  இருமொழிக் கல்வித் திட்டத்தில் சேர்வதற்கான மாணவர்களின் விருப்பம்,
(2)  முதன்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கும் தகைமையுள்ள பாட ஆசிரியர்கள் இருக்கின்றமை.

தரம் 6 வகுப்புக்கான ஒப்புதலைப் பெற்றுக் கொள்வது எவ்வாறு ?

  • தரம் 6 ல் இருமொழி வகுப்புக்கான ஒப்புதலை குறிப்பிட்ட மாகாணத்தில் உள்ள மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் பெற்றுக் கொள்ளலாம். தரம் 6 ல் இருந்து இருமொழிக் கல்வித் திட்டத்தின் கீழ் இருமொழி வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான விண்ணப்ப படிவங்ஙகளை நிரப்பி, முறையே, கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண இருமொழிக் கல்வி இணைப்பாளர் ஆகியோரின் பரிந்துரைகளுடன் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


ஒப்புதலைப் பெற்ற பின்னர் பாடசாலை இதனை கல்வி அமைச்சுக்கு அறிவிக்க வேண்டுமா ?

  • ஆம்.
  • அதிபர்கள் பத்தரமுல்லை, இசுறுபாயாவில் இருக்கும் கல்வி அமைச்சில் உள்ள இருமொழிக் கல்விக் கிளைக்கு இதனை அறிவிக்க வேண்டும். பாட நூல்கள், மதிப்பீட்டுத் தாள்கள் என்பவற்றை வழங்கல் மற்றும் ஆசிரியர் பயிற்சி அளித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு இந்த தகவல் மிகவும்  இன்றியமையாதது.


க.பொ.த.(உ.த.) வகுப்புகளுக்கான ஒப்புதலை பெற்றுக் கொள்வது எவ்வாறு ?

க.பொ.த.(உ.த.) வகுப்புகளின் இருமொழி வகுப்புகளுக்கான ஒப்புதலை கல்வி அமைச்சில் இருந்து பெற்றுக் கொளலாம். க.பொ.த.(உ.த.) வகுப்புகளில் இருமொழிக் கல்வித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, முறையே, கோட்டக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாண இருமொழிக் கல்விப் பணிப்பாளர மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் பரிந்துரைகளுடன் பத்தரமுல்லை, இசுறுபாயாவில், கல்வி அமைச்சில் அமைந்துள்ள இருமொழிக் கல்விக் கிளைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.