moe.gov.lk

கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சரின் செய்தி

தாய் நாட்டின் எதிர்காலமாகக் காணப்படும் மில்லியன் கணக்கான சிறுவர் சிறுமியரின் அறிவுச் சுவாலையைத் தூண்டிவிடுவது மிகச் சிறந்த பணியானது கல்வி அமைச்சின் பாற்பட்டதாக இருக்கின்றது. அறிவு, திறன், மனப்பாங்கு ஊடாக சிறந்த மாணவர்களை உருவாக்கும் பாரிய பொறுப்பு இலங்கையின் முழு ஆசிரிய சமூகத்தின் மீதுள்ளது.

கொள்கைகளை உருவாக்கல், உட்கட்டமைப்பு, பௌதிக மற்றும் மனித வளங்களை வினைத்திறனுடையதாக முகாமை செய்தல் மற்றும் எந்தவித இன, சமய அல்லது குல பாகுபாடின்றி உண்மையான இலங்கையர் என்ற மதிப்புடன் சகல எதிர்கால சவால்களையும் முறியடிப்பதற்கான வலிமை மற்றும் ஊக்கத்தை வழங்குவது கல்வி அமைச்சின் விசேட பணி என்று கருதுகிறேன்.

நல்லாட்சியின் ஊடாக சகல இனங்களினதும் நன்மையை நோக்கி கல்வி தொடர்பான சகல சேவைகளையும் நெறிப்படுத்துவதும் கல்வியில் ஒரு தரமான அபிவிருத்தியின் ஊடாக இலங்கைக்கு ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதும் கல்வி இராஜாங்க அமைச்சராகிய எனது பொறுப்பு என்று கருதுகிற்றேன்.

நவீன தொழினுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணைய தளத்தின் ஊடாக உண்ணாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு இலங்கையின் பொதுக் கல்வித் தகவல்களை எப்போதும் இற்றைப்படுத்தி வழங்க இயலும். இந்த இணைய தளத்தைப பயன்படுத்தி புதிய கல்வித் தகவல்களை நீங்கள் பெற்றுக் கொள்ளவும் உங்களின் குறைகளை எம்மிடம் சமர்ப்பிக்கவும் கிடைத்துள்ள பெரிய வாய்ப்பை பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

கௌரவ வே. இராதாகிருஷ்ணன் (பா,உ)
கல்வி இராஜாங்க அமைச்சர்

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.