moe.gov.lk

கொள்கை மற்றும் திட்டமிடல் கிளை

44


கொள்கை மற்றும் திட்டமிடல் கிளை (3 ம் மாடி )

 

 Education Sector Development Framework and Programme – II (ESDFP-II): 2012-2016

நோக்கக்கூற்று
இலங்கை பொதுக் கல்வி முறைமையில் சமத்துவம்(equity), பண்பு (தரம் quality) மற்றும் செயற்றிறனை (efficiency) உறுதிப்படுத்தம் கொள்கை அத்துடன் அதற்கேற்ற திட்டப் பண்பாடு

 
பணிக்கூற்று

பொதுக் கல்வி முறைமை தொடர்பான அரச கொள்கையின் அடிப்படையில் உருவான கொள்கைகளை ஆராய்ந்து அவற்றின் சமத்துவம்,. தரம் மற்றும் செற்றிறனை உறுதிப் படுத்தும் பொருட்டு முறைமைக்கான செயற்பாட்டு கொள்கையை அடையாளம் கண்டு, அக்கொள்கையில்  கட்டியெழுப்பப்பட்ட  முறைமையின்  உயர் நிலையை  அடைவதற்காக  நீண்டகால, இடைக்கால திறமுறைத் திட்டத்திலான வேலைத் திட்டங்கள் மற்றும் செயற்றிட்டங்கள் வகுத்தல், அவை செயல்பட உதவுதல்


பணிகள்

  • நடைமுறையிலுள்ள கல்விக் கொள்கையை ஆராய்தல், பகுத்தாய்தல்

பொதுக் கல்வி முறைமையில் சமத்துவம், தரம் மற்றும் செயற்றிறன் தொடர்பாக  நிலவும் கொள்கையை மேம்படுத்தல்,      அவற்றை பொதுமைப் படுத்தலுக்கும், அதற்கேற்ற  திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், பிரதானமாக நிலவும் சமச் சீரின்மையை அகற்றுவதற்குமான கொள்கை  ஆய்வுசெய்தல்

  • பொதுக் கல்வி முறைமைக்காக  இடம்பெறும் முதலீட்டை உயர்த்து வதற்குத் தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் வெளிநாட்டு உதவி பெற்றுக் கொள்ளல் அத்துடன் முதலீடு செய்தல் தொடர்பாக பொதுவான  விரிவான கொள்கை தயாரித்தல்,  திட்டமிடப்பட்ட மேலதிக ஒதுக்கீட்டு நிதியை முதலீடு செய்தல் பற்றிய கொள்கையை வகுத்தல்கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இயங்கும் கொள்கைத் திட்டமிடல் பரிந்துரைக் குழு செயல்பட உதவுதல்
  • பாடசாலைகளுக்கு வளங்கள் ஒதுக்குதல் பற்றிய செயற்பாடுகள், பாடசாலைக் கட்டமைப்பு தொடர்பாக முடிவு செய்யும் விதிமுறைகளை மேம்படுத்தல், மற்றும் செயற்றிறன் மிக்க பாடசாலை வலைப் பின்னலைப் பேணல
  • பாடத்திட்டக் கொள்கை, பரீட்சைக் கொள்கை  மற்றும் மாணவர் செயற்பாட்டுத்  திறனை  உயர்த்துவதற்பான செயற்பாட்டுக் கொள்கை போன்றவற்றைத் தயாரித்தல் தொடர்பாக பாடத்துக்குப் பொறுப்பான  பணிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல்
  • பிள்ளைகளின் கற்றல் ஆற்றலை மிகவும் வெற்றிகரமானதாக ஆக்கும்   விதத்தில் நம்பகத் தன்மையை அடையாளம் காண்பதற்கான பொருத்தமான கொள்கை ஆய்வுத் தேவைப்பாடு தொடர்பான  பரிந்துரையை முன்வைத்தல் (அமைச்சின் ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டுக் கிளைக்கு, பல்கலைக் கழகங்களுக்கு மற்றும் தேசிய  கல்வி நிறுவனத்துக்கு)
  • கல்வி முறைமையில் சேவைகள் வழங்கல் தொடர்பான நிலைமை மற்றும் அது பற்றிய கொள்கை  மாற்ற மடைதலை அடையாளம் காணும் பொருட்டு பயனாளிகளின் கருத்துகள் மற்றும் முன் மொழிவுகளை பெற்றுக் கொள்ளல் தொடர்பான  திறமுறைகளைத்  தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும்
  • அரச கொள்கை விளக்கம் மற்றும் தேசிய கல்விக் கொள்கைக் குழுக்களின் கொள்கை, சட்டவரம்பு மற்றும் கல்வி அமைச்சினூடாக அடையாளம் காணப்பட்ட கொள்கையை மையமாகக் கொண்டு, கல்வி முறைமையின் உயர்வைக் கருத்தில் கொண்ட நீண்ட கால, இடைக்கால மற்றும் குறுங்கால திறமுறைகளைத் திட்டமிட்டு  வழங்குதல் (தேசிய மற்றும் மாகாண கல்வி நிறுவனங்களுடன் இணைந்து)
  • கல்வி முறைமைக்காகக்  கிடைக்கப்பெறும், கிடைக்க விருக்கும் முன் மொழியப் பட்டுள்ள வெளிநாட்டு உதவி முறையாகவும் உச்ச செயற்றிறனுடனும் முதலீடு செய்யப் படுவதற்காக, பிரிவுகளின் வளர்ச்சியின் ஊடாக, இவ்வாறு தேவைப்பாடு கருதி, செயற்றிட்டங்கள்  வாயிலாகச் சிறப்பான திட்டத்தினை வழங்கல்
  • கல்வி அமைச்சின் இடைக்கால மற்றும் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல்
  • திட்டம் வழங்கல் செயற்பாட்டிற்கு வழிகாட்டலைப் பெற்றுக் கொள்வதற்காக நிலவும் தரவுகளை அறிவடிப்படையிலான முறையில் ஆய்வு செய்தல், செயல் படுத்தல், அத்துடன் அது தொடர்பான தொழினுட்பத்  திறமுறையைப் பயன்படுத்தலைப் பிரபலப்படுத்தல்
  • கல்விக் கொள்கை, திட்டம் மற்றும் வேலைத் திட்டம் தயாரிக்கும் போதும் செயற் படுத்தும் போதும் தேசிய மாணவர் அடைவு மட்டத்தை மதிப்பிடல், பல்கலைக் கழகத்துடன்  இணைந்து செயல்படல், அது தொடர்பான முடிவுகளின் படி முறைமைக்கு விளக்குதல்
  • வழங்கல் திட்டம் செயல்படுத்தப் படும்போது, தேவையான பங்களிப் பாளர்களுக்கு  ஒத்துழைப்பு வழங்கல், அத் திட்டங்கள் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றப் படல், மற்றும் தேவைக் கேற்ப மாற்றங்கள், மேம் படுத்தல்கள் மேற் கொள்ளல் தொடர்பாக அமைச்சின் செயலாற்றுகை மீளாய்வு மற்றும் கண்காணிப்புக்  கிளையுடன் இணைந்து செயல்படல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2786182 1327 011-2786182 
பிரதிக் கல்விப் பணிப்பாளர்   1329  
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1377  
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1357  
உதவிக் கல்விப் பணிப்பாளர்      
 கிளை 011-2786182 1377/1389/1328  

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.