moe.gov.lk

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக என்.எச்.எம். சித்ரானந்த அவர்கள் நியமிக்கப்பட்டார்

new sec 1கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமனம் பெற்ற திரு என்.எச்.எம். சித்ரானந்த அவர்கள் இன்று (28) ஆம் திகதி முற்பகல் கல்வி அமைச்சு செயலாளர் அலுவலகத்தில் சமா சம்பிரதாயங்களுக்கு முதன்மையளித்து தமது பணியை பொறுப்பேற்றுக்கொண்டார்

அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் நாட்டை அபிவிருத்தி செய்யூம் கொள்கை ரீதியான இலக்கினை அடைவதற்கு அலுவலர்கள் என்ற வகையில் பாரிய பொறுப்பு வழங்கப்படுவதனால்அந்த பொறுப்பை மேற்கொள்வதற்கு இதற்கு முன்; கல்வி அமைச்சில் தான் சேவையாற்றிய போது பெற்றுக்கொடுத்ததை போல அனைவரினதும் ஒத்துழைப்பு தனக்கு வழங்குமாறு செயலாளர் அமைச்சின்;

அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த நாட்டின் பெற்றௌர்களை மகிழ்ச்சியடைய செய்யக்கூடியமதாக இருப்பது கல்வி ஊடாக மாணவர்களின் மேம்பாட்டை உருவாக்கித் தருவதால் மாத்திரமே என புதிய செயலாளர் குறிப்பிட்டார்
புத்தளம் மாவட்டத்தில் ஆரச்சிக்கட்டுவ தம்பரகலே கிராமத்தில் ஆரம்ப கல்வியை தொடங்கி அதற்குப் பிறகு கன்துலாவ அரச மகா வித்தியாலயம் மற்றும் பல்ல நன்திமித்ர மகா வித்தியாலாத்திலும் கல்வி பயின்றுஇ கறுக்குவ சுகத்தானந்த மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த என்.எச்.எம்.சித்ரானந்த அவர்கள் 1986 ஆம் ஆண்டில் வணிகவியல் விசேட பட்டம் பெற்றார்;. அதற்குப் பிறகு புத்தளம் மாவட்டத்தில் பிரதேச அபிவிருத்தி முகாமையாளராக அவர் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார்

new sec 2 new sec 3

1990 ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து அன்றிலிருந்து 1998 ஆம் ஆண்டு வரை சிலாபம் மற்றும் மாதம்பை உதவி பிரதேச செயலாளராகஇ பதில் பிரதேச செயலாளராக மற்றும் பிரதேச செயலாளராக அவர் கடமையாற்றியூள்ளார். 1998 ஆம் ஆண்டில் இளைஞர் விவகார மற்றும் சமுர்தி அமைச்சின் உதவி பணிப்பாளராகவூம்இ அந்த அமைச்சின் உதவி செயலாளராகவூம் அவர் பணியாற்றியூள்ளார். அத்துடன் இலங்கை சமுர்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளராகவூம் சிலாபம் பிரதேச செயலாளராகவூம்; இலங்கை சுங்கத்தின் பிரதி பணிப்பாளராகவூம் பணிபுரிந்த அவர் 2009 ஆம் ஆண்டில் நிர்வாக மற்றம் நிதி மேலதிக செயலாளராக கல்வி அமைச்சில் சேர்ந்தார். 2015 ஆம் ஆண்டில் புத்தளம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட சித்ரானந்த அவர்கள் புதிய கல்விச் செயலாளராக நியமிக்கும் வரையில் அந்த பதவியில் பணியாற்றினார்

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.