moe.gov.lk

பாடசாலை கிறிக்கற்றை மேம்படுத்தும் மூன்றாண்டு கால தேசிய வேலைத் திட்டம்

cricketபாடசாலை கிறிக்கற் தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2018-2010 வெளியிடல் மற்றும் அது தொடர்பில் அதிபர்மாருக்கு அறியத் தரும் செயலமர்வு கடந்த வாரம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் பணடாரநாயக்கா பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

தேசிய கிறிக்கற் விளையாட்டில் தற்போது நிலவும் பின்னடைவுக்காண காரணத்தை அடையாளம் கண்டு அதற்கு நீண்டகால தீர்வு வழங்கும் நோக்கத்தில் பாடசாலை கிறிக்கற் விளையாட்டு தேசிய ஏற்பாட்டுத் திட்டத்தை தயாரிக்கும் குழு கல்வி அமைச்சரின் அறுவுறுத்தலின் பேரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் உள்ள பிரபல கிறிக்கற் விளையாட்டு வீரர்கள், கிறிக்கற் பயிற்றுநர்கள் மற்றும் ஆலோசகர்கள், இலங்கை பாடசாலை கிறிக்கற் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கொண்டு அமைக்கப்பட்ட அந்த குழுவினால் அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற பல கலந்துரையாடல்களின் இறுதியில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டுத் திட்டத்தில் அடங்கியுள்ள முனமொழிவுகளாவன.

1. தேசிய மட்டத்தில் கலந்து கொள்வதற்கான வழியாக 13க்குக் கீழ், 15க்குக் கீழ் 17க்குக் கீழ் மற்றும் 19க்குக் கீழ் என்று பாடசாலை கிறிக்கற் போட்டிகளை உரிய முறையில் தயாரித்தல்.

2. பாடசாலை கிறிக்கற் வீர்ர்களின் பங்குபற்றுதலை ஊக்குவிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் பாடசாலை கிறிக்கற் வீரர்களுக்கு விளையாட்டு சுகாதார அலகு ஒன்றை நிர்மாணித்தல்.

3. பாடசாலை கிறக்கற்றுக்குத்தேவையா உட்கட்டமைப்பு வசதிகள் turf wickets, matting wickets, concrete wickets, nets மறும் உள்ளக விளையாட்டகத்தை மேம்படுத்தல்.

4. கிறிக்கற் விளையாட்டு உபகரணங்கள் (Bowling machines, பந்து, புள்ளி காட்டும் திரை ) மற்றும் ஏனைய சகல உபகரங்களையும் வழங்கல்.

5. பாசாலை கிறிக்கற் விளையாட்டுக்குத் தேவையான பயிற்றுவிப்பாளர்கள், உடற் சிகிச்சையாளர்கள், நடுவர்கள் உள்ளிட்ட வசதிகளுக்குத் தேவையான நிதியொதுக்கீடு வழங்குதல்.

6. பயிற்றுவிப்பவர்கள் மற்றும் பாடசாலை கிறிக்கற் விளையாட்டு வீரர்’களின் பயனுறு அபிவிருத்திக்குத் தேவையான உதவு தொகை வழங்குதல்.

7. National junior selection panel / தேசிய கனிஷ்ட தெரிவுக் குழு மற்றும் மாகாணத்துக்கான தேர்வளவை உருவாக்குதல்.

8. பன்னாட்டு தேசிய போட்டிகள் மற்றும் பிரதேசங்களில் வெளிப்போட்டிகளில் அந்தந்த வயது பிரிவுகளுக்கு ஏற்ப ஏற்பாடுசெய்தல்.

9. வெளிப் பங்களிப்பாளர்களை ஈடுபடுத்தி விளையாட்டு வீர்ர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக அலுவலர்கள் உட்பட ஏனைய சகல தரப்பினருக்கும் தலைமைத்துவம், உள ஆலோசனை, இலஞ்சம் மற்றும் ஊழல் தவிர்தல், விளையாட்டு பண்பாட்டு தர்மோபதேச வேலைத் திட்டங்களை மேற்கொள்ளல். கணினி, கிறிக்கற் திறன் அபிவிருத்த மற்றும் ஊடகத்தைப் பயன்படுத்தல் தொடர்பில் மும்மொழியிலான வேலைத் திட்டங்களை மேற்கொள்ளல்.

10. பாடசாலை கிறிக்கற் விளையாட்டுக்காக வெப் தளத்தை உருவாக்குதல்.

11. சகல வயதுப் பிரிவு மட்டத்தில் பாடசாலை மற்றும் மாகாண மட்டத்தில் பயிற்சி வேலைத் திட்டங்களை ஏற்பாடு செய்தல்.

12. வெளியிலிருந்து உதவி செய்யும் தரப்பினருடன் தொடர்புகளை அபிவுருத்தி செய்தல் மூலம் கிறிக்கற் விளையாட்டை முன்னேற்றுதல்.

13. பாடசாலை கிறிக்கற்றில் நிதி வலு மற்றும் நிர்வாக திறமுறையை (வியூகம்) வலுப்படுத்தல் மற்றும் நிலைப்படுத்தல்.

14. பாடசாலைகளில் சேவையாற்றுவதற்கு கிறிக்கற் பயிற்சி ஆலோசகர்கள் 200 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.
போன்ற முக்கிய விடங்களாம்.


பாடசாலை கிறிக்கற் விளையாட்டு தேசிய திட்டத்தை தயாரித்தல் தொடர்பில் ஒத்துழைப்பு நல்கிய சிதத் வெத்தமுனி, ஜயந்த செனவிரத்ன, ரொசான் மகாநாம, முத்தையா முரளிதரன், மஹேல ஜயவர்தனா, ரோஜர் விஜேசூரிய, கால்டன் பேணாட் உள்ளிட்ட முன்னாள் பிரபல கிறிக்கற் விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு அசோக சேனானி ஹேவகே உள்ளிட்ட குழுவினருக்கும், உலங்கை பாடசாலை கிறிக்கற் சபையினட அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சர் தனது நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொண்டார்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.