moe.gov.lk

”பாடசாலை மட்டத்தில் கிறிக்கற் விளையாட்டை அபிவிருத்தி செய்வதன் மூலம் உண்ணாட்டு மற்றும் பன்னாட்டு மட்டத்தில் வலிமை மிக்க எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்” – கல்வி அமைச்சர அகில விராஜ் காரிய வசம் அவர்கள்.

cri1 1பாடசாலைக் கிறிக்கற் மூன்றாண்டு தேசிய திட்டம் கல்வி அமைச்சரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் கிறிக்கற் விளையாட்டை முன்னேற்றி, இந்த நாட்டின் கிறிக்கற் விளையாட்டுக்கு உண்ணாட்டு மற்றும் பன்னாட்டு மட்டத்தில் வலிமைமிக்க எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று கல்வி அமைச்சபர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கூறினார்கள். இன்று கொழும்பு பண்டாரநாயக்கா நினைவு மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சரின் தலைமையில் இலங்கை கிறிக்கற் விற்பன்னர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற பாடசாலைக் கிறிக்கற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட மூன்றாண்டுத் தேசிய திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் இங்கு கருத்து தெரிவித்தபோது, இந்த நாட்டில் கிறிக்கற் விளையாட்டுக்கு பாடசாலை வளமான இடமாகும் என்றும், அதனால் இந்த செயற்பாட்டுக்குப் பின்னால் எந்தவித அரசியல் வேலைத் திட்டமோ அல்லது பாசறையோ இல்லை என்றும் சொல்லில் முழுமையான அர்த்தத்துடன் இந்த நாட்டில் கிறிக்கற் விளையாட்டை எதிர்காலத்தில் வலிமையுடையதாக ஆக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் கருத்து தெரிவித்தார். இதற்கு நிபுணர்களின் அறிவு மிக அவசியமானதாகையால் அதற்காக இந்த நாட்டின் கிறிக்கற் வல்லுநர்களின் தொழில் அறிவை அடிப்படையாகக் கொண்டு, கல்வி அமைச்சு வசதிகளை வழங்குபவராகவும் கண்காணிப்பாளராகவும் செய்துள்ளது என்றும் அமைச்சிர் இதன்போது விளக்கிக் கூறினார்.
மேலும், கிறிக்கற் விளையாட்டு மட்டும் அல்லாமல் ஏனைய விளையாட்டுகளையும் பாடசாலை மட்டத்தில் முன்னேற்றுவதற்காக தான் தலைமைத்துவம் வழங்குவதாக கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் பாடசாலை கிறிக்கற் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்து கவனம் செலுத்துவதற்குத் தான் விரும்புதானது, இலங்கையில் புகழ்பெற்ற கிறிக்கற் விளையாட்டின் மீது எழுந்துள்ள பின்புலத்திலாகும் என்று கூறினார். பாடசாலை கிறிக்கற் விளையாட்டு வீரர்களின் வசதிக்காக விளையாட்டுக் உபகரணங்களை விலைக்கு வாங்கும் போது வரி விலக்கு வழங்குவது தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு வருவதற்கு தான் எதிர்பார்த்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கூறினார்கள்.
இங்கு பாடசாலை கிறிக்கற் விளையாட்டை முன்னேற்றுவதற்காக கிறிக்கற் பிரபலங்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடசாலை கிறிக்கற்றை மேம்படுத்துவதற்கான மூன்றாண்டு கால தேசிய திட்டம் பிரபல கிறிக்கற்ற்ற பயிற்றுவிப்பாளரும் பிரபல கிறிக்கற் விடயம் பற்றிய அறிஞருமாகிய திரு ஜயந்த செனவிரத்தவினால் கல்வி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த விழாவில் இந்த நாட்டின் கிறிக்கறட பிரபலங்களான சிதத் வெத்தமுனி, ரொசான் மகாநாம, மகேல ஜயவர்தனா ஆகியோர் கிறிக்கற் விளையாட்டில் பல்வேறு பிரிவுகள் தொடர்பில் உரையற்றினார்கள். அதிபர்கள், ஆசிரழயர்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகள் உட்பட பாடசாலை கிறிக்கற் புலத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அலுவலர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.