moe.gov.lk

உதயமாகியிருக்கும் புத்தாண்டை புதிய சிந்தனை ஆண்டாக ஆக்குவோம் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.

jan1st“கல்வி புலத்தைச் சேர்ந்த நிறுவனங்களில் கடமைப் பட்டியல்கில் காணப்படக்கூடிய பிரச்சினைகளை நேரத்தோடு அடையாளம் கண்டு அவற்றுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு கவனம் செலுத்துங்கள்” – புதிய ஆண்டில் அலுவலர்களுக்கு கல்வு அமைச்சரின் அறிவுரை.

நாட்டில் பெரும்பாலோனோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கல்வி அமைச்சுப் புலத்திற்கு உரித்தான சகல நிறுவனங்களின் நடைமுறைகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை, நேர காலத்தோடே அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று புத்தாண்டில கல்வி அமைச்சில் பணியை ஆரம்பிக்கும் போது அமைச்சர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

கடந்து சென்ற மூன்றாண்டு காலத்தில் கல்வி அமைச்சில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் தொடர்பில் நாட்டு மக்களிடம் போன்று கல்விப் புலத்தில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் நல்ல அபிப்பிராயம் நிலவுவுகின்றது என்றும், தனது அமைச்சை வலுவான வேலைத் திட்டங்களில் கீழ் இனியும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு விரும்புதாகவும் கல்வி அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

உதயமாகியுள்ள புதிய ஆண்டு, புதியதாய்ச் சிந்தனை செய்யும், நூறாயிரக் கணக்கான இலங்கை பிள்ளைகளின் கல்வி தொடர்பில் போன்று அவர்களின் எதிர்கால அபிவிருத்திக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆண்டாக ஆக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கல்வி அமைச்சில் சகல பணிக்குழுக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கினார்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.