‘ தேசிய கல்விக் கல்லூரிகளில் பாடத் திட்டத்தை நவீனப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது ’ – கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம்.

cab copyநிர்வாக கடமைகளை வலுப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு 20 கெப் ரக வாகனங்கள். தேசிய கல்விக் கல்லூரிகளில் பாடத் திட்டங்களை நவீனப்படுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்துகின்றது என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார். இன்று (13) காலை கல்வி அமைச்சு வளவில் இடம் பெற்ற 20 தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு கெப் ரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் கல்விக் கல்லூரிகளில் காலங் கடந்த பாடத் திட்டங்களை நவீனப்படுத்தி நவீன உலகத்துக்கு ஏற்றவாறு கற்கை முறையினை தயாரிக்க வேண்டும். கல்விக் கல்லூரிகளில் நிர்வாகக் கடமைகளுக்கு போக்கு வரத்து வசதிகள் கடும் தேவை நிலவுகின்றது என்றும் அந்த தேவையை பரிசீலித்தும் கல்விக் கல்லூரிகளில் நிர்வாகக் கடமைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் இவ்வாறு வாகனங்கள் வழங்க முடிந்தமைக்குத் தான் மகிழ்ச்சியடைவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். கல்விக் கல்லூரிகளில் வசதிகளை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதுடன் அந்த பொறுப்பு தொடர்பில் அரசாங்கம் மிகவும் கவனம் செலுத்துகின்றது என்றும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இவ்வாறு வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில், கல்வியை உயர்ந்த தரத்தில் வைப்பது மட்டுமன்றி உயர்ந்த தரமுள்ள பெறுபேறுகளையும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும் அமைச்சர் இங்கு சிறப்பாக வலியுறுத்தினார். அத்துடன் கல்விக் கல்லூரி பயிலுநர்களின் மாதாந்த கொடுப்பனவை ரூபா 2500 ல் இருந்து ரூபா 5000 ஆக உயர்த்துவதற்கும் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் விசேட அறிவுறுத்தலின் பேரில் தேசிய கல்விக் கல்லூரிகளில் நிர்வாக நடவடிக்கைகளை மிகவும் செயற்றிறனுடையவையாக ஆக்கும் நோக்கத்தில் இந்த கெப் வாகனங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்க எடுக்கப்பட்டது.

கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வே. இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுனில் ஹெட்டியாராச்சி ஆகியோருட்பட அமைச்சின் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.