moe.gov.lk

“ எதிர்கால சந்ததியை மதுப் பழக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்காக பாடசாலை சமூகம் மட்டுமல்லாது, பாடசாலைக்கு வெளியே உள்ளவர்களும் தலையிடுவது முக்கியமானதாகும்.” – கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம்.

drug1எதிர்கால சந்ததியை மதுப் பழக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்காக பாடசாலை சமூகம் மட்டுமல்லாது, பாடசாலை வெளியே உள்ளவர்களும் தலையிடுவது முக்கியமானதாகும் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இது சம்பந்தமான விடயங்களைப் பேசும்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாடசாலை முறைமையில் மதுப் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக தற்போது பாடசாலை மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் ஊடாக பல்வேறு வேலைத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், பாடசாலைக்கு வெளியில் நிலவும் மதுப் பாவனையை மட்டுப்படுத்துவதற்காக சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் அமைச்சு என்ற முறையில் நாட்டில் நீதித் துறையும் நேரடியாக ஈட்டபட வேண்டும் என்று கல் அமைச்சர் இங்கு விளக்கிக் கூறினார். அவ்வாறே கல்வி அமைச்சு மற்றும் பாதுகாப்புப் பிரிவும் இணைந்து, புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் பாடசாலையில் மது ஒழிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அத்தகைய செறய்பாடுகளின் காரணமாக தற்போது பாடசாலைப் புலத்தில் மதுப் பாவனை பெபருமளவு ஒழிந்துள்ளது என்றும் கல்வி அமைச்சர் மேலும் இங்கு குறிப்பிட்டார்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.