moe.gov.lk

முஸ்லீம் பாடசாலைகளின் இரண்டாவது தவணையின் இரண்டாவது கட்ட இறுதித் திகதி மாற்றம்...

musஅனைத்து முஸ்லீம் பாடசாலைகளின் இரண்டாவது தவணையின் இரண்டாவது கட்டத்தின் இறுதித் திகதியையும் மூன்றாவது தவணையின் ஆரம்ப திகதியையும் மாற்றுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அனைத்து முஸ்லீம் பாடசாலைகளின் இரண்டாவது தவணை இரண்டு கட்டமாகப் பிரிக்கப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டது. அதன் முதலாவது கட்டத்தில் 2017.05.27 முதல் 2017.06.27 வரை விடுமுறை வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டத்தில் (நாளை) 2017.08.18 முதல் 2017.08.27 வரை விடுமுறை வழங்கப்படவிருந்தது. எனினும் செப்டம்பர் 01 ம் திதகி இடம் பெறும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு அந்த விடுமுறை நாட்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதனால், அனைத்து முஸ்லீம் பாடசாலைகளின் இரண்டாவது தவணையின் இரண்டாவது கட்டத்திற்காக நாளை முதல் வழங்கப்படவிருந்த விடுமுறை இரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக 2017.08.31 முதல் 2017.09.08 வரை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

முஸ்லீம் பாடசாலைகளின் மூன்றாவது தவணை 2017.09.11 திங்கட் கிழமை ஆரம்பமாகும்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.