ஒரு மாதத்துக்குள் தேசிய பாடசாலைகளில் சகல ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை.

conferசகலதேசிய பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பி பாடசாலைகளில் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் கல்விச் செயற்பாடுகளை இடையூறு இன்றி கொண்டு நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இதன் பொருட்டு தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் மேலதிக ஆசிரியர்கள் சம்பந்தமான விபரங்களுக்கு அமைய ஆசிரியர் சமன்படுத்தலை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர், நீண்ட காலமாக ஒரே தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களைப் பொருத்தமட்டில் அவர்களுக்கு இட மாற்றும் பெற்றுக் கொடுக்கவும், தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு மாகாண அரச சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தகைமையான ஆசியர்களை தேசிய பாடசாலை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கினார். அத்துடன் தரம் பெற்ற ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


இன்று (19) கல்வி அமைச்சில் உள்ள கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற தேசிய பாடசாலைகளின் ஆதிபர்மாரின் கூட்டத்தில் இந்த அறுவுறுத்தல்களை வழங்கியதுடன், இங்கு ‘அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ செயற்றிட்டத்தின் கீழ் இடம் பெறும் கட்டிடங்கள் நிர்மாணிக்கும் பணிகளின் முன்னேற்றம் பற்றி விசாரித்தறிதலும் இடம் பெற்றது. பாடப் பரிந்துரையை மாற்றுதல் மற்றும் இற்றைப்படுத்தல் என்பவற்றுக்கு அமைய ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகளை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பாடசாலைகளில் உள்ளக மேற்பார்வை செயற்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கு செயற்பாடுகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட புறப்பாடச் செயற்பாடுகளைப் பிரபலப் படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கு கலந்துரையாடல் செய்யப்பட்டது. அவ்வாறே அதிபர்மார் உட்பட ஆசிரியர்களின் ஆளுமையை அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என்று இந்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் நல்ல விழுமியங்களைப் பேணுவதன் ஊடாக பாடசாலைத் தரத்தை மேப்படுத்த முடியும் என்றும் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுனில் ஹெட்டியாராச்சி மற்றும் மேலதிக செயலாளர்கள் உட்பட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.