moe.gov.lk

“தனது தனிப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் கவிதை எழுதியமைக்காக இட மாற்றத்துக்கு ஆளான ஆசிரியர்” தொடர்பாக அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் வெளியான தகவல் மற்றும் கல்வித் தொழிற் சங்கங்களில் வெளியானவை சம்பந்தமானது.

fbஇந்த ஊடக அறிக்கைகள் தனித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட அறிக்கைகள் என்று முதலில் தெரிவிக்கின்றோம்.

குறித்த செய்தி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி எந்த விதத்திலும் கல்வி அமைச்சினால் குளியாப்பிட்டி மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் ஃபேஸ்புக் பக்கத்தில் கவிதை எழுதுவது சம்பந்தமாக மாத்திரம் விசாரணை நடைபெறவில்லை என்று பொறுப்புணர்ச்சியுடன் குறிப்பிடுகின்றோம்.


பாடசாலை செயற்பாடுகளை உரிய முறையில் நடைமுறைப் படுத்துகையில் அந்த பாடசாலையில் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் அது தொடர்பில் இடையூறு விளைவித்துக் கொண்டிருந்ததால் அது சம்பந்தமாக முறையான விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் சில ஆசிரியர்கள் சமூக வலைத் தளங்கள் ஊடாக பாடசாலை நிர்வாகம் மற்றும் அதிபரை விமர்சனம் செய்து வருகிறார்கள் என்று குற்றஞ் சாட்டி குறித்த பாடசாலை அதிபரால் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய கல்வி அமைச்சினால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. அந்த ஆசிரயர் அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுளார்.

அந்த ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்குவதற்கான காரணம் ஒழுக்காற்று விசாரணையில் நாரம்மலை மயூரபாத வித்தியாலயத்தின் ஏழு ஆசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதாகும், இந்த இடமாற்றம் குறித்த ஆசிரியர் தொடர்பில் இடம்பெற்ற ஒழுக்காற்று விசாரணை மற்றும் வேறேதும் காரணங்களால் மேற்கொள்ளப்பட்டது அல்ல. அத ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் ஒரு தேசிய பாடசாலையில் இருந்து இன்னொரு தேசிய பாடசாலைக்கு செய்யப்பட்ட இடமாற்றம் என்பதனால் எந்த விதத்திலும் அந்த ஆசிரியருக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட வில்லை. மேலும், நாரம்மலை மயூரபாத வித்தியாலயத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போது தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் இட மாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு மேலதிகமாக அருகாமையில் இருக்கும் பாடசாலைகளில் இருக்கும் மேலதிக ஆசிரியர்கள் அதன் பொருட்டு இணைப்பு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஆசியர் இட மாற்றம் செய்தல் இடம் பெற்றதானது கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள நிர்வாக அதிகாரத்துக்கு அமைய செய்யப்பட்டதாகும். அந்த இட மாற்றத் தீர்மானம் சில பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மேலதிக ஆசிரியர்கள் என்பவற்றை சமன் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய தீர்மானத்திற்கு அமைவானதாகும்.

மேலும், சில இணைய வலைத் தளங்களில் வெளிவந்திருந்த சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அழங்கப்பட்ட 06-06-2017 ம் திகதிய இட மாற்றத்தை அறிவிக்கும் கடிதத்தில் உள்ள கடைசி அறிவுறுத்தலுக்கு அமைய கடிதம் கிடைத்து இரண்டு கிழமைக்குள் குறித்த இடமாற்றம் சம்பந்தமாக யாதேனும் எதிர்ப்பு இருந்தால் அறியத் தருமாறு அறிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஊடக அறிக்கையை தயாரிக்கும் வரைக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியரியரால் இருந்து எந்தவித எதிர்ப்போ அல்லது மேன்முறையீடோ முன் வைக்கப்பட வில்லை என்று வகைகூறலுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய அவரின் புதிய சேவை நிலையத்துக்குச் சென்று, கடமையைப் பொறுப்பேற்றுள்ளார் என்று நாரம்மலை மயூரபாத வித்தியாலயத்தின் அதிபர் கல்வி அமைச்சுக்கு அறிவித்தல் செய்துள்ளார்.

பிழையான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இவ்வாறான உணர்ச்சிகரமான ஊடக அறிக்கை காரணமாக விடயத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் மாத்திரம் அல்லாமல் கல்வி அதிகாரிகளுக்கும் சிரமங்கள் எற்படுத்தியுள்ளதுடன் அதன் மூலம் அனைத்து கல்வித் துறைக்கும் பாரிய கெட்ட பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்தை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம். நிர்வாக நடைமுறைகளுக்கு அமைய குறித்த ஆசிரியரால் இந்த இட மாற்றம் சம்பந்தமாக மேன்முறையீடு செய்யப்படவில்லை. அவ்வாறான நிலையில் நிர்வாகம் மற்றும் சட்டம் தொடர்பில் அவ்வப்போது இலங்கை ஆசிரியர் சங்கம் போன்ற தொழிற் சங்கங்கள், இதைச் செய்வது பிழையான விடயங்கள் மீது ஊடக அறிக்கை விடுத்து சூதாட்ட ஊடக பிரச்சாரத்தையும், பிரபலப்படுத்தலையும் உறுதி செய்து எதிர்பார்ப்பதானது இந்த நாட்டில் கல்வித் புலத்தின் மேன்மைக்காக செய்யப்படுவது அல்ல என்பது தெளிவாகின்றது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.