moe.gov.lk

பன்னாட்டு வெசாக் தின கொண்டாட்டத்துக்கு மத்திய பண்பாட்டு நிதியத்தில் விசேட வேலைத் திட்டம்

vesakஇம்முறை பன்னாட்டு வெசாக் விழா இலங்கையில் நடைபெறுகின்துடன் தற்போது பன்னாட்டு வமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சிக்கு பங்களிப்பு செய்திருக்கின்றன. ஶ்ரீ சம்புத்த வரலாறு, பௌத்த ஓவியங்கள் மற்றும் பௌத்த சிந்தனைகளை நுகர்தல் போன்ற வகையில் ஆக்கங்களை உருவாக்குதல் என்பன தற்போது ஆரம்பமாகியுள்ளன.

மே மாதம் 10ம் திகதி முதல் 14 ம் திகதி வரை இடம் பெறும் தியவன்னா வெசாக் வலயத்துக்கு அருகில் ஐக்கிய நாடுகளின் வெசாக் வலயத்தை நிர்மானித்தலும் தற்போது டைபெற்று வருகின்றது. வலயத்தில் உள்ள 10 நாடுகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்படும் ஐக்கிய நாடுகளின் இந்த பன்னாட்டு வெசாக் வலயத்தில் அந்தந்த நாடுகளின் பௌத்த அடையாளங்களை காட்டும் வண்ணம் ஆக்கங்கள் தயார் செய்யப்படுகின்றன. கல்வி அமைச்சின் கீழ் மத்திய பன்பாட்டு நிதியத்துக்கு இந்த பன்னாட்டு வெசாக் வலயத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பௌத்த சிந்தனைகளை காட்சிப்படுத்த ஆவன செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அமைய கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனை மற்றும் ஏற்பாடுகளுக்கு அமைய மத்திய பண்பாட்டு நிதியத்தினால் தியவன்னாவைக்கு சம்பந்தப்படுத்தி புராண காலத்தில் பௌத்த சமயம் வளர்ச்சிபெற்ற குளங்கள் – தாதுகோபங்கள், கிராமங்கள், பன்சலைகள் ஆகியவை கொண்ட எண்ணக்கருவை தொனிப் பொருளாகக் கொண்டு வரலாற்று சிறப்பு மிக்க அனுராதபுர நிலத் தோற்றத்தை இந்த இடத்தில் மீளுருவாக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் போது விசேட ஒளியமைப்புகள் மற்றும் விசேட பாவனை முறைமைப் பயன்படுத்தி பௌத்த சிந்தனையை வெளிப்படும் வண்ணம் செய்யப்படும் நேரடிக் காட்சி இங்கு வரும் சகல மக்களும் கண்டு மகிழக் கூடியதாக இருக்கும். நூறு அடி உயரமான தாதுகோபுரம் இந்த இடத்தில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. நிர்மலமான தேரவாத பௌத்த தர்மத்தை இலங்கை மக்கள் பயன்படுத்தி இழந்து விட்ட மகிமையை இதன் மூலம் மீண்டும் அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பன்னாட்டு வெசாக் வலயத்தில் இலங்கையின் அடையாளம் மத்திய பண்பாட்டு நியத்தின் மூலம் காட்டப்படுகின்றது.

கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் வழங்கிய ஆலோனை மற்றும் வழிகாட்டலின் படி கல்வி அமைச்சின் கீழ், மத்திய பண்பாட்டு நியத்தின் பூரண மேற்பார்வையின் கீழ் செய்யப்படும் இந்த ஆக்கங்கள் மத்திய பண்பாட்டு நிதியத்துக்காக பட்டலிய தேசிய அனுரு பாடசாலை மற்றும் எமதூர் (அப்பேகம) செயற்றிட்டத்தினால் உருவாக்கப்படுகின்றன.

அத்துடன், பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டு சக்தியினால் அலரி மாளிகைக்கு அருகில் இடம் பெறும் ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயத்தில் விசேடமான ஆக்கங்களை முன்வைப்பது தொடர்பாகவும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்கள் வழங்கிய ஆலோனை மற்றும் வழிகாட்டலின் படி மத்திய பண்பாட்டு நிதியம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.