moe.gov.lk

ஆசிரியர்கள் மற்றும் அதிப்பர்மாரின் வேலிறுத்தமத்தை தோற்கடித்து முறைப்படி கடமைக்கு...

minபதவி ஆசை கொண்ட அரசியல் நோக்கங்களை முன்வைத்த வேலை நிறுத்தத்தை தேற்கடித்து பிள்ளைகளின் கற்றல் உரிமையை பாதுகாப்பதன் பொருட்டு அர்பணிப்பு செய்த சகல அதிபர்மாருக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நாடு தழுவிய அடிப்படையில் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொண்டு பாடசாலைக் கல்விவை சீர்குலைப்பதற்கு சில பதவி ஆசை கொண்ட தொழிற் சங்கங்கள் இன்று மேற்கொண்ட முயற்சி முற்றாக தோற்றுவிட்டது என்பது கல்வி அமைச்சில் இடம் பெற்ற ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது..

அகில இலங்கை அடிப்படையில் சகல தேசிய பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் வருகை 90% க்கு மேல் இருந்த்து. மாகாண பாடசாலைகளில் 88% க்கு அதிகமான ஆசிரியர்கள் வருகை தந்திருந்தனர் என்று அறிக்கை கிடைத்துள்ளது. இது பாடசாலை ஆசிரியர்களால் பெற்றுக் கொள்ளப்படம் கடமை விடுப்பு, சுகயீன விடுப்பு போன்று பிரசவ விடுப்பு ஆகியவற்றுக்கு அமைய பரிசீலனை செய்யது பார்க்கும்போது சாதாரண நிலைமையாகும். மேலும், விசேடம் என்னவென்றால் சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருகை 100% மற்றும் 98% மட்டங்களாக இருந்த்தாகும்.

எவ்வாறாயினும் பல பிரதேசங்களில் 10 பாடசாலைகள் வரை ஆசிரியர்களின் வருகை மிகக் குறைந்த மட்டத்தில் இருந்தது. ஆயினும், அந்த பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் இடையூறு இன்றி இடம் பெறுவதற்கு இயலுமாக இருந்தது என்று குறித்த பாடசலைகளின் அதிபர்கள் மூலம் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இந்த வேலைநிறுத்தத்துக்கு அமைய சில தொழிற்சங்க உறுப்பினர்கள் நேற்று பாடசாலைச் சுற்றாடலுக்குள் சென்று அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர்கள் கைகளில் துணடுப் பிரசுரங்களை வழங்கி வேலைநிறுத்த்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அச்சுறுத்தியதாக தகவல் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. அவ்வாறே அவர்களின் அச்சுறுத்தலை கணக்கில் எடுக்காது கடமைக்குச் சமூகம் தந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை போன்று வரவு இடாப்பில் கையொப்பம் வைப்பதற்கு இடமளிக்காத நிகழ்ச்சியும் சில அறிய வந்துள்ளன. தொழிற் சங்க உரிமையை வென்றெடுக்கும் போர்வையில் இடம் பெறும் இத்தகைய செயல்கள் கல்வி அமைச்சினால் கண்டுகொள்ளப்படுவதில்லை. இந்த வேலை நிறுத்தம் பாடசாலை முறைமையில் தோற்கடிக்கப்பட்டுளது என்பதை நாம் கவனத்தில் எடுப்போம்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.