“கடந்த காலத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த கல்வி அமைச்சை பெருமை மிக்க ஒரு மட்டத்துக்கு உயர்த்துவதற்கு என்னால் இயலக் கூடியதாக இருந்தமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள்.
ஒரு நாட்டில்சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்தப்பட வேண்டுமானால், கல்வியில் ஒரு புரட்சிகரமான மாற்றம் செய்யப்படல் வேண்டும். அதற்குத் தேவையான அடித்தளம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறுகின்றார். பிள்ளைகளின் எதிர்கால நலனை முன்னிட்டு ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். கடிதங்கள், முகநூல் செய்திகள் போன்ற எத்தகைய ஊடகங்கள் மூலமாகவும் அறிவுஜிவிகளால் சமர்ப்பிக்கப்படும் அத்தகைய சகல முன்மொழிவுகளையும் பணிவுடன் ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் அமைச்சர் கூறுகிறார்.
சமீபத்தில் (05) கேகாலை புனித மரியாள் கல்லூரிய்ன 150 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக நடாத்தப்பட்ட வருடாந்த நிகழ்ச்சின் முடிவில் கலந்துகொண்ட போது அமைச்சர் இந்த கருத்துகளைக் கூறினார். காப்பாளரான பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம் பெற்ற இந்த விழாவில், பிரதம அமைச்சர், கல்வி அமைச்சர் பொறுப்பை தனக்கு வழங்கிய போது வெளியிட்ட ஒரு உண்மையையும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
![]() |
![]() |
மேலும், அமைச்சர் தனது கருத்துகளை வெளியிடும் போது கல்வி முறமயின் அபிவிருத்தியின் பொருட்டு துணிவாக தீர்மானங்களை எடுப்பதற்குத் தான் தயங்கப் போதில்லை என்றும் ஏதாவது முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்றால் அவை நேரடியாகக் கவனிக்கப்படும். இதன் காரணமாகவே, கடந்த காலத்தில் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த கல்வி அமைச்சரை ஒரு பெருமையான மட்டத்துக்கு உயர்த்த இயலுமாக இருந்தது.
நாட்டில் கல்வி முறைமையை ஒழுங்கு படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய மூன்று பிரதான தரப்பினரான அமைச்சர் சுட்டிக் காட்டினார், அவர்கள் அதிபர்-ஆசிரியர்கள், அரசாங்கம் மற்றும் பெற்றோர் ஆகியோராவர். இந்த மூன்று தரப்பினரின் கூட்டு முயற்சியின் ஊடாக இந்த நாட்டின் கல்வி முறைமையை வலுப்படுத்தலாம். பிள்ளைகளின் எதிர்கால நன்மைமை முன்னிட்டு சகல தேவையான தீர்மானங்களஞம் துணிவுடன் எடுக்கப்படும் என்றும் அமைச்சர்’ மேலும் குறிப்பிட்டார். அமைச்சர் கபீர் ஹாசிம், மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத் மற்றும் பெருந்தொகையான மக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.