moe.gov.lk

திறன் வகுப்பறை (Smart Class Room) மாதிரி செயற்றிட்டம் ஆரம்பம்.

smartகல்வித் தர அபிவிருத்தியின் பொருட்டு தீர்மானமிக்க மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்படும் தீர்வுத் தீர்மானத்தை தாமதப்படுத்துவதற்கு அல்லது அது தொடர்பில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு ஒரு சிலர் முயற்சி மேற்கொள்கிறார்கள் என்றும், அத்தகைய காரணங்களால்தான் மாணவர்களுக்கு மிகவும் வசதியாக பயன்படுத்தக் கூடிய, மருத்துவர்கள் அனுமதி தந்துள்ள நவீன கதிரைகளை வழங்குவதற்கு இது வரை இயலாதிருக்கிறது என்றும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூற்றுகையில் தான் அவ்வாறான செயல்கள் மூலம் ஊக்கத்தை இழந்து விடாது, எவ்வாறாயினும் பாடசாலை பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்னிட்டு எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இன்று முற்பகல் (13) ஜயவர்தனபுர (ஆண்கள்) மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாதிரி திறன் வகுப்பறை திறப்பு விழாவில் கலந்து சிறப்பித்தபோது இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மாற்றங்களால் மாறிக்கொண்டிருக்கும் இருக்கும் நவீன உலகத்தோடு கல்வி செயல் முறைகளை இற்றைப்படுத்தும் சவாலுக்கு முகம் கொடுப்பதற்காக பாடசாலை மாணவ சமூகத்தைப் பொருத்தம் உள்ளதாக ஆக்குவதன் பொருட்டு மாதிரி செயற்றிட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 25 பாடசாலைகளில் திறன் வகுப்பறைகளை (Smart Class Room) ஆரப்பித்து வைப்பதற்கு கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த்து.

மாதிரி செயற்றிட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த திறன் வகுபறையில் டெப் கணினியைப் பயன்படுத்தி ஆங்கில மொழி மூலம் கற்பித்தல் / கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் அச்சடிக்கப்பட்ட எந்தவொரு நூலையும் பயன்படுத்த வேண்டிய தேவையற்ற விதத்தில் அந்த விடயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

smart1 smart2

கோஜென் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஹர்ஷ சுபசிங்க அவர்களின் பங்களிப்பின் மூலம் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்களின் இணக்கத்துடன் ஜயவர்தனபுர (ஆண்கள்) மகா வித்தியாலயத்தில் கட்டுமானம் செய்யப்பட்ட இந்த மாதிரி திறன் வகுப்பறை கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களால் மாணவர்களின் உரித்தாக்கப்பட்டது.

இந்த விழாவில் பிரதி வெளிவாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கல்வி அமைச்சின் செயலாளர் திரு சுனில் ஹெட்டியாராச்சி, கோஜென் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஹர்ஷ சுபசிங்க உட்ப அமைச்சின் அலுவலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.