moe.gov.lk

செய்தி அறிக்கை, பரீட்சை விதிகளின்படி செயற்படுங்கள் அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் அறிவூறுத்தல்

fardaபரீட்சைக்குத் தோன்றிய சில மாணவிகளுக்கு அவர்கள் பர்தா அணிந்திருந்தமையால் பரீட்சை நிலையத்திற்குள் நுழைய முடியமாற்போனமை பற்றி கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் முறையிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பரீட்சைகள் ஆணையாளர் திரு. டப். எம். என். ஜே. பு~;பகுமார அவர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளமையோடு அதிகாரிகள் பரீட்சை விதிகளுக்கு ஏற்ப செயற்படவேண்டும் என அறிவூறுத்தப்பட்டுள்ளார்கள். அதன்படி எந்த ஒரு நிலையிலும் பர்தா அணிந்து பரீட்சை நிலயங்களுக்கு வரும் முஸ்லிம் மாணவியர்கள் சௌகரியக்குறைவிற்கு உட்படுத்தப்படக்கூடாது என்றும்இ அவர்களது அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பெண் உத்தியோகத்தர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டு அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து அதிகாரிகளும் அறிவூறுத்தப்பட்டுள்ளனர்.

அதுபோலவே பர்தாவூடன் வரும் முஸ்லிம் மாணவியர்களும் தம் அடையாளத்தை உறுதிப்படுத்த பரீட்சை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வேண்டுவ தோடுஇ இத்தகைய நிகழ்ச்சிகளை முன்னிலைப்படுத்தி இனவாதம் மற்றும் மதவாதத்தினை முன்னிலைப்படுத்துவதையிட்டு தம் கவலையை தெரிவித்துக்கொண்டார். எல்லா மாணவர்களுக்கும் பொதுவான பரீட்சை விதிமுறைகள் சமமாகவே செயற்படுத்தப்படும் என்றும்இ எந்த ஒருதனி ஒருவருக்கும் அது அகௌகரியமானதாகவோ அல்லது விசேட சலுகையூடன் கூடியதாகவோ இருந்திடாது என்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார். எனவே நாவலப்பிட்டி புனித மரியாள் பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி சம்பந்தமான விடயங்களை ஆராயந்து பார்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பரீட்சை ஆணையாளருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.