moe.gov.lk

‘ஊழல் மோசடிக்கு முற்றுப் புள்ளி வைத்து நடைமுறைப்படுத்தப்படும் சீருடை வவுச்சர் முறைமையில் எவருக்கும் வியாபாரம் செய்வதற்கு இடம் வைக்கப்பட மாட்டாது – கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம்.

akilaகடந்த காலத்தில் சீருடைத் துணி வழங்கப்பட்ட போது ஊழல் மோசடிகள் பல இடம் பெற்று பல்வேறு தேவையற்ற பண விரயம் ஏற்பட்டதையும் தாய் நாட்டின் பிள்ளைகளுக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதியை பாழாக்குவதை தவிர்த்து, அரசாங்கம் பிள்ளைகளுக்கு ஒதுக்கும் முழுமையான நிதியின் அளவு குறைவடையாமல் பிள்ளைகளின் கைகளில் சேர்ப்பிப்பதை நோக்கமாக்க் கொண்டு சீ ருடை வவுச்சர் அட்டை முறைமையைச் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

சம்பிரதாய பூர்வமான தீர்வைத் தீர்மானத்தை மாற்றி பொது மக்களின் பணத்தை நாசப்படுத்துவதற்கு இடம் அளிக்காமல் தான் எடுத்த இந்த தீர்மானம் ஊடாக பாரிய பண நாசத்தை தவிர்க்க முடிந்துள்ளது என்றும் தேவையற்ற களஞ்சியச் செலவு, போக்கு வரத்துச் செலவு போன்று மறைமுகமான தரகுப் பணமாக வீணாகிய பலமடங்கு பணத்தை மீதப் படுத்த முடிந்தது என்றும் குறிப்பிட்ட கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அரசாங்கத்தால் மக்களுக்காக ஒதுக்கும் நிதி முழுமையாக அவர்களின் கைகளில் போய்ச் சேரச் செய்தல் உலகப் பிரசித்தியான முறைமை எனக் கொண்டு வவுச்சர் முறைமை இதன் பொருட்டு அறிமுகப்படுத்தியதாக குறிப்பிட்டார். அவ்வாறே கடஜ்த ஆண்டைவிட மிகப் பாதுகாப்பான வவுச்சர் இம்முறை வெளியிடப்பட்டுள்ளது என்றும், சந்தை விலைக்கு அமைவாக மிகவும் உயர்ந்த தரமான துணியை கொள்வனவு செய்வதற்கு ஏற்றவாறு பணத்தை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் கூறினார்.

அதன்படி நாடு முழுவதிலும் அமைந்துள விரும்பிய துணி விற்பனை நிலையத்துக்குச் சென்று வவுச்சரை சமர்ப்பித்து, துணியைக் கொள்வனவு செய்யத் தக்கதான அவகாசம் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூபா 2450 மில்லியன் இம்முறை சீருடை வவுச்சர் வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு மூன்று வர்த்தகர்களின் கைகளில் மாத்திரம் சென்று சேர்ந்த பெருந் தொகையான பணம் இம்முறை சகல புடைவை விற்பனையாளர்களின் கைகளிலும் சென்று சேர்வதன் காரணமாக அவர்களின் வர்த்தக நடவடிக்கை வெற்றி அடைந்துள்ளது.

அத்துடன் புடைவை விற்பனை நிலையம் இல்லாத கிராமப் பகுதிகளில் பிள்ளைகளின் வசதி கருதி வவுச்சர் அட்டையை சமர்ப்பித்து அர்கள் துணிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக சலுசல நிறுவனத்தில் வசதிகள் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். குறித்த பிரதேசங்களில் அதிபர்மார் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் இருந்து வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். ஆயினும் எந்த விதத்திலும் பிள்ளைகளுக்கு சலுசலவில் இருந்து கொண்டுவரப்படும் துணிமை மாத்திரம் பெற்றுக் கொள்வது கட்டாயப் படுத்தக் கூடாது என்பதுடன் அவர்களுக்கு விருப்பமான முறையில் எந்தவொரு புடைவை விற்பனை நிலையத்திலும் சீருடை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக அதிபர்மார் செய்ய வேண்டிய செயற்பாடுகளைக் காட்டும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருக்கின்றது. அத்துடன் அதில் விபரமாக சீருடை வவுச்சர் பிள்ளைகளின் கைகளில் சேர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறே எந்த விதத்திலும் வியாபாரிகளோடு தொடர்பு கொண்டு சீருடைத் துணியை விற்பனை செய்வதற்கு அதிபர்மார் தலையிடக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது.

இதற்கு மேலதிகமாக எந்த வகையிலும் சீருடை பெற்று கொள்வதற்காக ஒரு விற்பனை நிலையத்தை பெயர் குறிப்பிடுவதற்கு எந்தவொரு அதிபருக்கோ அல்லது அலுவலருக்கோ முடியாது. அத்துடன் பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் விருப்பப்படி தாம் விரும்பும் எந்தவொரு விற்பனை நிலையத்திலும் சீருடை துணியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஊழல் மோசடிகளுக்கு முற்றப் புள்ளி வைப்பதற்காக நடைமுறைப் படுத்தப்படும் சீருடை வவுச்சர் வேலைத் திட்டத்தின் ஊடாக வியாபாரம் செய்யும் தனி நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பின்நிற்கப் போவதில்லை என்று எச்சரித்தார்.

அத்துடன் பாடசாலை பிள்ளைகளுக்கு வவுச்சர் வழங்கும் போது சில அதிபர்மார் மற்றும் அலுவலர்கள் மேற்கொள்ளும் மோசடிகள் பற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன. அவை சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் படி அமைச்சர் கட்டளை பிறப்பித்துள்ளார்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.