யாவருக்கும் கல்வி, ஆயிரமாமாண்டு வளர்ச்சிகாண் திறமுறை மற்றும் திட்டமிடல் கிளை
யாவருக்கும் கல்வி, ஆயிரமாமாண்டு வளர்ச்சிகாண் திறமுறை மற்றும் திட்டமிடல் கிளை
(3 ம் மாடி)
நோக்கற்கூற்று
ஜோம்தியான் (1990) மற்றும் டாகா (2000) நடைமுறை வரைவுத் திட்டங்கள் 2005 ம் ஆணடளவில் யாவரும் கல்வியை அடைவதற்கான இலக்குகள், குறிக்கோள்கள் மற்றும் திறமுறைகளை முன்மொழிந்துள்ளன. அந்த ஆறு இலக்குகளையும் அடைவதற்குத் தேவையான கொள்கைகளைத் திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தலே யாவருக்கும் கல்வி கிளையின் பொறுப்பாகும்.
பணிக்கூற்று
யாவருக்கும் கல்வி இலக்குகளுக்கு அமைவாக தேசிய இலக்குகள், கொள்கைகள் மற்றும் திறமுறைகளைத் தீர்மானிப்பதற்கு குறித்த தரப்பினருடன் இணைந்து திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புகளை மேற் கொள்ளல்.
பணிகள்
- வறுமையை ஒழித்தல் மற்றும் வளர்ச்சித் திறமுறைகளுடன் தொடர்புபட்டுள்ள, நிலையான, நன்கு ஒன்றிணைக்கப்பட்டுள்ள கல்வித் துறைசார் வரைவுத் திட்டத்துக்குள் யாவருக்கும் கல்விக் கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்தல்.
- யாவருக்கும் கல்வி இலக்குகளில் மீள் கவனம் செலத்துவதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் யாவரும் சிறந்த வாழ்நாள் கல்வி கற்றலுக்கான வாய்ப்பளிக்கும் முயற்சிகளை மீளெழுச்சியூட்டுதல் என்பவற்றுக்காக யாவரும் கல்வி இலக்குகளை அடைவதில் தொடர்பு பட்டுள்ள ஏனைய அமைச்சுகள் மற்றும் கல்வி அமைச்சின் ஏனைய கிளைகளுடன் சீரான ஒருங்கிணைப்பினை மேற் கொள்ளல்.
- தேசிய, மாகாண மற்றும் வலய இலக்குகள் மற்றும் யாவருக்கும் கல்வியின் ஆறு குறிக்கோள்கள் ஆகியவற்றை அடைதல் என்பவற்றைக் கண்காணிப்பதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் இடைவெளிகளை மதிப்பீடு செய்தல்.
- 2015 ல் யாவருக்கும் கல்வி குறிக்கோள்களை அடைவதற்கான தேசிய திட்டங்களைக் கண்காணித்தலின் போது அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் விடயங்கள் என்பனவற்றுக்கான நடவடிக்கை மற்றும் திறமுறைகளை ஒன்றிணைத்தல்.
- யாவருக்கும் கல்வி தொடர்பான கல்விப் புள்ளி விபரங்கள் மற்றும் சுட்டிகளில் கொள்திறனை மேம்படுத்தும் இலக்குகளைக் கண்காணிப்பதற்கு தேசிய, மாகாண மற்றும் வலயங்கள் ஊடாக தொழினுட்ப ஒத்துழைப்பை வழங்கல்.
- யாவருக்கும் கல்விக் குறிக்கோள்களை நடைமுறைப் படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கும் உரிய கொள்கை வரைவுத் திட்டத்தினை வளர்ச்சிப்படுத்தல் அத்துடன் அவற்றை கல்விப்புல வளர்ச்சிச் சட்டகம் மற்றும் வேலைத் திட்டத்துடன்.(ESDFP) தொடர்பு படுத்தல்.
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்
பதவி | தொலைபேசி எண் | தொலைமடல் | |
நேரடி | இடைத்தொடர்பு | ||
கல்விப் பணிப்பாளர் | 011-2787136 | 1334 | 011-2787136 |
உதவிக் கல்விப் பணிப்பாளர் | 1345 | ||
கிளை | 011-2787136 | 1330 |